top of page
Image de Nick Fewings

உங்கள் உறவின் ஆரோக்கியத்தை அளவிடவும்!

emojis.png

பயன் அடையுங்கள், உங்கள் தொடர்பு ஆரோக்கியமாக இருக்கும் போது,உங்கள் துணை...

  • உங்கள் முடிவுகள், ஆசைகள் மற்றும் சுவைகளை மதிப்ப்பார்கள்

  • உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஏற்றுக்கொள்ளுவார்கள்

  • உங்களை நம்புவார்கள்

  • நீங்கள் நிறைவாக உணரும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்

  • இருவரும் இணைந்து செய்வதற்கு உங்களின் உடன்பாட்டை உறுதி செய்வார்கள்

நீங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறீர்கள். சில சமயம் வாக்குவாதம் செய்தாலும், உங்களுக்கு பயமில்லை.

emojis2.png

கவனம், நிறுத்துங்கள் என்று கூறுங்கள், உங்கள் துணையுடன் வன்முறை எற்படும் போது...

  • கோபமாக இருக்கும்போது சில நாட்கள் புறக்கணிக்கப்படுகிறீர்களா

  • உங்களை மிரட்டுவார்கள் நீங்கள் எதையாவது மறுத்தால்

  • உங்கள் கருத்துக்களையும் திட்டங்களையும் குறைத்து மதிப்பிடுவார்கள்

  • பொது இடங்களில் உங்களை கேலி செய்து அவமானப்படுத்துவார்கள்

  • தொடர்ந்து பொறாமை மற்றும் உடைமையை வைத்திருப்பார்கள்

  • உங்களிடம் பொய் சொல்கிறது,கையாளுகிறது

  • உங்களின் உல்லாசப் பயணங்கள், உடைகள், ஒப்பனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவார்கள்

  • உங்கள் உரைகள், மின்னஞ்சல்கள், பயன்பாடுகளைத் தேடுவார்கள்

  • நீங்கள் அவருக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்

  • உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துவார்கள்

நடப்பது சாதாரணமானது அல்ல. இது உங்கள் தவறு அல்ல, நீங்கள் நிலைமையை சகித்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

emojis3.png

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், உதவி கேளுங்கள், உங்கள் துணையினால் ஆபத்தில் இருக்கும்போது...

  • நீங்கள் அவரை நிந்திக்கும்போது உங்களை பைத்தியம் என்று சொல்லுவது

  • ஏதாவது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டால் கோவப்படுவது

  • உங்களால் தற்கொலை செய்யப் போறன் என்று மிரட்டுவது

  • ஆபாச உள்ளடக்கத்தைப் பார்க்க உங்களைத் தூண்டுவது

  • உங்களின் அந்தரங்க புகைப்படங்களை விநியோகிப்பதாக மிரட்டுவது

  • உங்கள் அனுமதியின்றி உங்கள் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது

  • உங்களை தள்ளுதல், இழுத்தல், அறைதல், உலுக்குதல், அடித்தல்

  • உங்களை உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்துவது

  • உங்களை ஆயுதம் காட்டி அல்லது கொன்று விடுவதாக மிரட்டுவது

கவனமாக இருங்கள், ஒருவேளை நீங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தனியாக இருக்க வேண்டாம், நிலைமை மாறலாம்.

bottom of page